“மூக்குத்தி அம்மன்” கடந்த 2020ம் ஆண்டு ரிலிசான படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார்.
ஆர் ஜே பாலாஜி “மூக்குத்தி அம்மன்” இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு “மாசானி அம்மன்” என பெயர் வைத்து வேலையை ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையில் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் நயன்தாராவை வைத்து “மூக்குத்தி அம்மன் 2″வை எடுக்க உள்ளதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் இயக்குனர் உள்ளிட்ட யார் பெயரும் இடம்பெறவில்லை. “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சம்மந்தமாக ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ஐசரி கணேஷ் ஆகியோருக்கு இடையே சம்பளம் சம்மந்தமாக எழுந்த கருத்து வேறுபாடுதான் இப்படி இரண்டு பேரும் தனித்தனியாக இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது.