ஆர்.ஜே.பாலாஜியின் பட டிரெயிலர் ரிலீஸ்!

Filed under: சினிமா |

கோகுல் இயக்கத்தில், ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் “சிங்கப்பூர் சலூன்” திரைப்படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி சலூன் கடை வைத்திருக்கும் நபராக நடித்து வருகிறார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது. படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் கோகுலுக்கும், ஆர்.ஜே.பாலாஜிக்கும் கருத்து மோதல் எழுந்து பிரச்சனை உண்டானதாக கூறப்படுகிறது. இப்போது ஷூட்டிங் முடிந்தும் இருவருக்கும் இடையிலான பிரச்சனை தீரவில்லை என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இந்த படம் ஜனவரி 25ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்போது படத்தின் டிரெயிலர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. அதன்படி இஞ்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு வெற்றிகரமான முடி திருத்துனராக வர ஆசைப்படும் ஒரு இளைஞனின் போராட்டத்தைப் பற்றிய படமாக “சிங்கப்பூர் சலூன்” இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.