முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னால் எடப்பாடி பழனிச்சாமி கை காட்டுபவர் தான் பிரதமராக வருவார் என பேசியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அதனை அடுத்து பாஜக மற்றும் அதிமுக கூட்டணி ஓரளவு வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டு வருகிறது. அதிமுக கூட்டணி அதிகபட்சமாக 5 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் கூறி இருக்கும் நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்பி உதயகுமார், “நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்” என்று பேசியுள்ளார். அவரது பேச்சை நெட்டிசன்கள் காமெடியான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
Related posts:
350 ஏக்கர் பரப்பளவு; 3 பிரமாண்ட மேடைகள்; 10 லட்சம் தொண்டர்கள். திருச்சியில் மாஸ் காட்டும் திமுக!
ஓய்வூதியம் பெறுவார்களா நீங்கள் உங்களுக்கு ஒரு முக்கியதகவல் !!
OBC பட்டியலிலிருந்து பல பிரிவுகள் நீக்கம்; மேல் முறையீடு செய்வதாக மமதா பானர்ஜி உறுதி.
துவாக்குடி பகுதியில் 2-வது சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும். அதிமுக ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்டச் ...