‘ஆளவந்தான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Filed under: சினிமா |

கடந்த 2001ம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான “ஆளவந்தான்” திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

இத்திரைப்படம் உலகம் முழுதும் வரும் 8ம் தேதி டிஜிட்டலில் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாளை மாலை 05.03 மணிக்கு இந்த படத்தில் இடம்பெற்ற “கடவுள் பாதி மிருகம் பாதி” என்ற பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து இத்திரைப்படத்திற்கும் பாடலுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுதும் ஆயிரம் திரையரங்குகளில் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படத்தை பார்க்க பலர் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இரண்டு வித்தியாசமான வேடங்களில் கமல்ஹாசன் நடித்த படம் 20 வருடங்களுக்கு முன் தோல்வியடைந்தாலும் தற்போது வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.