ஆளுநர் ரவி ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு விளக்கமளித்துள்ளார். ஆனால் தற்போது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆன்லைன் மசோதா தடை மசோதா கடந்தாண்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவை ஆறு மாதங்கள் கழித்து ஆளுநர் திருப்பி அனுப்பினார். மேலும் அந்த மசோதாவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமென்று அறிவுறுத்திருந்தார். இரண்டாவது முறையாக மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு கவர்னரின் அனுப்பப்பட்டது. அந்த மசோதாவிற்கு தற்போது ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மசோதாவில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என ஆளுநர் கூறியதையடுத்து எவ்வித மாற்றமும் செய்யாமல் தமிழக சட்டமன்றத்தில் அந்த மசோதா மீண்டும் இயற்றப்பட்டது.