ஆவினின் புதிய அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

ஆவின் நிர்வாகம் 3 பால் வகைகளை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ஆவின் நிறுவனம் டிலைட், சமன்படுத்தப்பட்ட மற்றும் நிறை கொழுப்பு பால் வகைகள் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3.5% கொழுப்பும், 8.5% இதர சத்துக்களும் கொண்ட ஊதா நிற பாக்கெட்டுகள், 3% கொழுப்பும், 8.5% இதர சத்துக்களும் கொண்ட இளஞ்சிவப்பு நிற பால் பாக்கெட்டுகள் மற்றும் 6% கொழுப்பும், 9% இதர சத்துக்களும் கொண்டிருக்கும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுக்கள் என 3 வகை பால் வகைகளை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் ழுமுதும் 10000-க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களின் தேவையை அறிந்து ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், பால் மற்றும் பால் உபபொருட்களின் தேவை மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளதால், விற்பனை நிலையங்களை அதிகரிக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மற்றும் சுற்றுலா பகுதிகளிலும் ஆவின் பாலகம் அமைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.