இசைஞானி இளையராஜா தனது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்க இருக்கிறார்.
இதுவரை இசைஞானி இளையராஜா பல மொழிகளிலும் 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். பல சாதனைகள் படைத்துள்ள இவர் ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 2ம் தேதி தனது பிறந்த நாள் கொண்டாடுவார். எனவே இந்த ஆண்டு தனது பிறந்த நாள் அன்று கோவையில் இசைக்கச்சேரி நடத்த திட்டமிட்டுள்ளார். இசை நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கங்கை அமரன் கவனித்து வருகிறார். இது அவரது ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. உண்மையில் இளையராஜாவின் பிறந்த நாள் ஜுன் 3 ஆகும். கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளும் அன்றுதான் என்பதால் தன்னைச் சந்திக்க வரும் விஐபிக்களுக்கு சிரமம் இருக்கக் கூடாது என்பதற்காக ஒரு நாள் முன்கூட்டி தன் பிறந்த நாள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.