இசையமைக்கும் பணிகளில் மிஷ்கின்!

Filed under: சினிமா |

இயக்குனர் மிஸ்கின் “பிசாசு 2” திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர். தற்போது மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதியும் ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். படம் பிப்ரவரியிலேயே தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்போது முன் தயாரிப்புப் பணிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி வேறு சில படங்களில் நடித்து வருவதால் இந்த படத்துக்கு தேதிகள் ஒதுக்காமல் இருந்தார். இப்போது அவர் தேதிகள் ஒதுக்கியுள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் விரைவில் அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ள நிலையில் இப்போது படத்தின் பாடல்களுக்கான இசையமைப்புப் பணிகளில் மிஷ்கின் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.