இசையமைப்பாளருக்கு வில்லனாகும் வடிவேலு!

Filed under: சினிமா |

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு வில்லனாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுராஜ் இயக்கத்தில், வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு முடிந்துள்ளது. சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ள வடிவேலு, அடுத்தடுத்து “மாமன்னன்” உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நகைச்சுவை மன்னனான வடிவேலுவை அடுத்து ஒரு படத்தில் வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் படத்தில்தான் வடிவேலுவை வில்லனாக நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதாம்.