வரும் 27ம் தேதி நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கலுக்கான தேதி முடிவடைந்துவிட்டது.
இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா ஆகியோர் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 121 வேட்பாளர்களில் 80 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் 41 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். நிராகரிக்கப்பட்ட 41 மனுக்களும் சுயேட்சையாக போட்டியிடுவதற்கான மனுக்கள்.