இணையத்தில் பிரபலமான அஸ்வினி கைது

Filed under: தமிழகம் |

இன்று இணையத்தில் பிரபலமான அஸ்வினியை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

அஸ்வினி சென்னையடுத்துள்ள மகாகபலிபுரத்தில் உள்ள பூஞ்சேரியில் வசித்து வருபவர். இவர் தலசயன பெருமாள் கோயிலில் தங்கள் சமூகத்தினருடன் அன்னதானம் சாப்பிட சென்றபோது கோயில் நிர்வாகிகளால் அவமதிக்கப்பட்டதாக வீடியோவில் புகாரளித்திருந்தார். இதையடுத்து அமைச்சர் சேகர் பாபு அப்பெண்ணுடனுடனும் அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தோருடன் அமர்ந்து சாப்பிட்டார். கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது, அஸ்வினியின் வீட்டிற்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நலத்திட்டம் வழங்கி அவர் வீட்டில் சாப்பிட்டார். அதன்பின், இவர் சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவில், பல்வேறு காரணங்கள் கூறி வங்கிகளில் தங்களுக்கு கடன் உதவி கிடைக்கவில்லை என தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவால் அவர் பலராலும் அறியப்பட்டார். நரிக்குறவர் பெண் அஸ்வினி உள்ளிட்ட 4 பெண்களுக்கு மாமல்லபுரத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்து மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் உத்தரவிட்டிருந்தார். மாமல்லபுரத்தில் சக பழங்குடியினத்தைச் சேர்ந்த நந்தினி என்ற பெண், அஸ்வினி கத்தியால் கையைக் கிழித்ததாக போலீசில் புகாரளித்திருந்தார். இப்புகாரையடுத்து அஸ்வினியை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இதுபற்றி அஸ்வினி கூறும்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு சென்றதால் நான் பிரபலமாகினேன். இதனால் சிலர் என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு வீண் பழி சுமத்தியுள்ளனர் என்றார்.