இந்தித் திணிப்பு சுற்றறிக்கைக்கு அமைச்சர் உதயநிதி கண்டிப்பு

Filed under: அரசியல்,தமிழகம் |

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்தித்திணிப்பு பட்டியலை ஊழியர்களுக்கான சுற்றறிக்கை என்ற பெயரில் நியூ இந்தியா அசூரன்ஸ் வெளியிட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளார்.

உதயநிதி அவரது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும், இந்தி புத்தகங்களை வாங்க வேண்டும், இந்தி திறனறிய சோதனை நடத்த வேண்டும் & என நீண்டதொரு இந்தித்திணிப்பு பட்டியலை ஊழியர்களுக்கான சுற்றறிக்கை என்ற பெயரில் நியூ இந்தியா அசூரன்ஸ் வெளியிட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். உதட்டளவில் தமிழ், தமிழர் என ஏமாற்றுவது. செயல் என்று வரும்போது இந்தியை திணிப்பது என்ற ஒன்றிய அரசின் இரட்டை நிலைப்பாடையும், ஆதிக்க இந்தியையும் தமிழ்நாடும், தி.மு.கழகமும் ஒருபோதும் அனுமதிக்காது. தனது இந்தித்திணிப்பு சுற்றறிக்கையை நியூ இந்தியா அசூரன்ஸ் உடனே திரும்பப்பெற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.