இந்தியன் படத்தின் ரி ரிலீஸ் எப்போது?

Filed under: சினிமா |

இந்தியன் 2, இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் ஆகிய படங்கள் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதில் “இந்தியன் 2” பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இந்தியன் 2 திரைப்படத்துக்கான ரிலீஸ் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. ஜூலை 12ம் தேதி படம் ரிலீசாகவுள்ளது. “இந்தியன் 2” படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக “இந்தியன்” முதல் பாகத்தை மே 30ம் தேதி ரி ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் முடிவு செய்துள்ளராம். ஆனால் இதுவரை தேதி அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் ஜூன் 7ம் தேதி “இந்தியன்” திரைப்படம் பிரம்மாண்டமாக அதிக திரையரங்குகளில் ரி ரிலீஸ் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.