இந்தியன் 2 அடுத்த ஷூட்டிங் ஸ்பாட் எது?

Filed under: சினிமா |

கடந்த சில மாதங்களாக “இந்தியன் 2” திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “இந்தியன் 2” திரைப்படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் ரிலீசாகவில்லை. படப்பிடிப்புத்தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு பிரச்சனைகளை தீர்த்து தற்போது அவரும் ஒரு தயாரிப்பாளராகி படத்தை தயாரித்து வருகிறார். மாதம் 10 நாள் வீதமாக “இந்தியன் 2” ஷூட்டிங் நடந்துவருகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் வரையிலும் படப்பிடிப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் அடுத்த ஆண்டு தீபாவளிக்குதான் “இந்தியன் 2” ரிலீசாகும் என சொல்லப்படுகிறது. இதுவரை சென்னையில் நடந்து வந்த ஷூட்டிங், அடுத்த மாதம் 22ம் தேதி திருப்பதியில் நடக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.