ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. வரும் ஜூலை மாதம் 12ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. பாடல்களும் வெளியானது. படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளன. படத்துக்கான வியாபாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தின் டிரெயிலலர் சமீபத்தில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. படத்துக்காக பல்வேறு நாடுகளில் புரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார் கமல்ஹாசன். அப்போது ஒரு நிகழ்வில் பேசும்போது “இந்தியன் 2 படத்தில் நான் நடிக்க ஒத்துக் கொண்டதற்குக் காரணமே இந்தியன் 3 படம்தான். அதில் நான் சேனாபதியின் தந்தையாக நடித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே “இந்தியன் 2” படத்தில் கமல்ஹாசன் குறைவான நேரமே இடம்பெறுவார் என ஒரு தகவல் பரவி வரும் சூழலில், கமலின் இப்பேச்சு அதை உறுதி செய்வது போல் உள்ளது.