நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாகிஸ்தான் முஸ்லிம்களை விட இந்திய முஸ்லிம்கள் நன்றாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் சர்வதேச பொருளாதாரத்திற்கான பீட்டர்சன் மையத்தின் தலைவருடன் உரையாடினார். அப்போது அவர், “உலகின் இரண்டாவது பெரிய முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் வாழ்வில் எந்தவித கஷ்டமும் இல்லை. இஸ்லாமிய நாடு என்று பாகிஸ்தான் தன்னை அறிவித்துக் கொண்ட நிலையில் பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் நன்றாக உள்ளனர். இந்தியாவிலுள்ள அனைத்து முஸ்லிம் சமூகத்தினரும் தங்கள் தொழிலை நன்றாக செய்து வருகின்றனர். தங்களது குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தருகின்றனர். அரசாங்கம் அவர்களுக்கு தோழமையாக இருந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.