இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்ற ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று கரூர் திண்டுக்கல் உள்பட ஒரு சில மாவட்டங்களில் கன மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை கற்றுக் கொடுக்க பத்து தொலைக்காட்சிகள் ரெடி - அமைச்சர் செங்கோட்டையன்!
10 ஆண்டுகளில் இந்தியா பிரம்மிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.
சின்னம் கிடைத்ததால் பாமகவினர் மகிழ்ச்சி!
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை அடியொற்றியது போலத் தயாரிக்கப்பட்ட வேளாண்மை நிதிநிலை அறிக்கை!



