இந்துக்கோவிலில் 3 வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள இந்துக் கோவில்கள் மீது தாக்குதல் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. சமீபத்தில், விக்டோரியா மாநிலத்தில் இந்துக் கோவிலான சிவ விஷ்ணு கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த கோயிலில், இந்தியர்களுக்கு எதிராக சில வாசகங்கள் எழுதி, ஒரு வாரத்தில் இரண்டாம் முறையாக தாக்குதல் நடத்தப்பட்டப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையொட்டி, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 3வது முறையாக இந்துக் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்குள்ள இஸ்கான் கோவிலின் சுவர்களில் காலிஸ்தான் வாழ்க என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் பிரபல இதழில் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியிலுள்ள இந்துக்கள், கோயில் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.