இந்து என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயரே!

Filed under: சினிமா |

நடிகர் கமல்ஹாசன் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்பது இல்லை என்றும் அது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்று தெரிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் வந்ததிலிருந்து ராஜராஜன் சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை என்ற பேச்சு பல தலைவர்களால் கூறப்பட்டு வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் இது குறித்த கருத்து தெரிவித்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையிலிருந்து இந்து மதம் என்ற பெயர் ராஜராஜன் காலத்தில் இல்லை. சைவம் வைணவம் சமணம் ஆகிய மதங்கள் தான் இருந்தது. இந்து என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர். பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த பிறகு தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டதாக ஒரு உணர்வு ஏற்படுகிறது. மேலும் சினிமா துறையில் மொழி அரசியல் செய்யாமலிருக்க வேண்டும் என்பதே எனது ஆசை” நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.