மீண்டும் இந்தோனேஷியாவில் உள்ள பெரிய எரிமலைகளில் ஒன்றான செமேரு எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது. இதனால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு நிலவி உள்ளது.
அதிகமான எரிமலைகளை கொண்டுள்ள நாடு இந்தோனேஷியா. ஆண்டுதோறும் அதிகமான நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்பு சம்பவங்கள் இந்தோனேஷியாவில் பதிவாகின்றன. கடந்த ஆண்டில் இதே டிசம்பர் மாதத்தில் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள செமேரு எரிமலை வெடித்ததில் 51 பேர் பலியானார்கள். தற்போது இந்த எரிமலை மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது. 12,060 அடி உயரம் கொண்ட இந்த எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளதால் வானுயரத்திற்கு புகை மண்டலம் எழுந்துள்ளதுடன், பல இடங்களில் சாம்பல் மழை பெய்துள்ளது. இதனால் எரிமலையை சுற்றி 5கி.மீ தூரத்திற்கு உள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். எரிமலையிலிருந்து வெளியேறும் தீக்குழம்புகள் ஆற்றில் கலந்து வரலாம் என்பதால் ஆற்றுப்படுகை அருகே வாழும் மக்களும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்பு குழு முழு வேகத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.