19 வயது வாலிபர் இன்ஸ்டாகிராமில் கிடைத்த நட்பின் மூலம் அழைத்ததால் லாட்ஜுக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கொல்லாங்காடு பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி இன்ஸ்டாகிராமில் 19 வயது வாலிபர் நாகேஷ் உடன் நட்புடன் பழகினார். இதனையடுத்து இருவரும் ஒருவருக்கு ஒருவர் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர். வாலிபர் நாகேஷ் பத்தாம் வகுப்பு மாணவியின் வீட்டுக்கே வந்து அவரை லாட்ஜிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இது குறித்து தகவலறிந்த மாணவியின் பெற்றோர் மகளிர் போலீசில் புகார் செய்தனர். தலைமறைவான 19 வயது நாகேஷை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குமரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.