இமாச்சல பிரதேச சபாநாயகர் அதிரடி உத்தரவு!

Filed under: அரசியல்,இந்தியா |

எதிர்க்கட்சித்தலைவர் உள்பட 15 பாஜக எம்.எல்.ஏக்களை இமாச்சல பிரதேச சட்டப்பேரவையில், சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

பாஜக எம்.எல்.ஏக்கள் இம்மாச்சல பிரதேச சட்டப்பேரவையில் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதுடன், சபாநாயகர் அறையில் தவறாக நடந்து கொண்டதால் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டியை இழந்து விட்டதாகவும் பாஜக எம்எல்ஏக்கள் கோஷமிட்டு வருகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆறு எம்எல்ஏக்கள் நேற்று நடந்த மாநிலங்களவை தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார் என்றும் இன்னும் சில எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது