விரைவில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சமீபத்தில் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பை முடித்து வந்துள்ளார். தற்போது அவர் குறும்படம் இயக்குவதாக தகவல் வெளியானது. எனவே, அவர் விரையில் இயக்குனராக சினிமாவில் அறிமுகமாகுவார் அப்படத்தை விஜய் தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நடிகர் விஜய் மாதிரி அவர் மகன் சஞ்சயும் இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். ஆனால், நடிகராக அல்ல இயக்குனராக. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே “வேட்டைக்காரன்” திரைப்படத்தில் ஒரு பாடலில் விஜய்யுடன் இணைந்து அவரது மகன் ஜேசன் சஞ்சய் நடனமாடியுள்ளார்.