இயக்குனர் சிபிசக்கரவர்த்தி அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “டான்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் சிபிசக்கரவர்த்தி அடுத்ததாக ரஜினியின் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தையடுத்து அவர் நடிக்கவிருக்கும் 170வது படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்கி, லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிபிச்சக்கரவர்த்தி இயக்கிய “டான்” படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரித்த நிலையில் அப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலானதை அடுத்து ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை லைகா நிறுவனம் சிபிக்கு கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.