தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து பணியாற்ற இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி தயாராகி வருவதாக கூறியுள்ளார்.
சினிமா ரசிகர்களுக்கு ஏற்றவாறு சிறந்த படங்களை திரையரங்குகளுக்கு எடுத்து வருவதில் சிறந்தவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜதமவுலி. “பாகுபலி 1 & 2” மற்றும் அவரது சமீபத்தய படைப்பான “ஆர்ஆர்ஆர்” ஒரு பிளாக்பஸ்டராக இருந்தாலும், இப்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து பணியாற்ற தயாராகி வருவதாக அவர் கூறியுள்ளார். சமீபத்தில், எஸ்.எஸ்.ராஜமௌலி படத்தைப் பற்றிய பரபரப்பான விவரங்களை கூறியுள்ளார். படத்தின் கதை ஒரு ‘globetrotting adventure’ என்றும், இது ஒவ்வொரு சினிமா ரசிகரையும், திரையரங்குகளுக்கு வருபவர்களையும் ஈர்க்கும் என கூறினார். தற்போது ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் அவர் படப்பிடிப்பை 2023ம் ஆண்டின் மத்தியில், அநேகமாக மே மாதத்தில் தொடங்குமென தெரிகிறது.