இயக்குனர் வாசுவின் “சந்திரமுகி 2”வில் பிரபல நடிகை இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2005ம் ஆண்டு வெளியான “சந்திரமுகி” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மரகதமணி இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக மைசூரில் உள்ள ஒரு அரண்மணையில் படமாக்கி வருகிறார் பி வாசு. படத்தில் சந்திரமுகியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அது சம்மந்தமான புகைப்படங்களை எல்லாம் கங்கனா வெளியிட்டிருந்தார். இப்போது திரைப்படத்தில் முன்னணி நடிகையான மஹிமா நம்பியார் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் “சந்திரமுகி 2” திரைப்படத்தில் கதாநாயகியாக மஹிமா நம்பியார் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. இவர் ஏற்கனவே “சாட்டை” மற்றும் “மகாமுனி” போன்ற படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர்.