இளைஞர்களின் மாரடைப்புக்கு காரணம் என்ன?

Filed under: இந்தியா |

இந்திய இளைஞர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மாரடைப்பு உட்பட ஒரு சில காரணங்களால் மரணமடைந்து வருகின்றனர். குறிப்பாக ஜிம்மில் அதிக அளவு ஒர்க் அவுட் செய்பவர்கள் மாரடைப்பால் இறந்து வருவது வாடிக்கையாக உள்ளது.

இது குறித்து ஐசிஎம்ஆர் ஆய்வு செய்து கொடுத்துள்ள விளக்கத்தில், “இந்தியாவில் இளைஞர்கள் திடீர் மரணம் அடைய கோவிட் தடுப்பூசி காரணம் என்று கூறுவது சரியல்ல. கொரோனா சிகிச்சை, குடும்பங்களில் உள்ள நோய், வாழ்க்கை முறை மாற்றங்களால் இளைஞர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம். கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 1 முதல் 2023ம் ஆண்டு மார்ச் 31 வரை உயிரிழந்த 18 முதல் 45 வயதினர்களை ஆய்வு செய்த பின்னர் அறிந்து முடிவு வெளியாகி உள்ளது” என்று கூறியுள்ளார். கோவிட் தடுப்பூசி காரணமாகத்தான் இளைஞர்களுக்கு மாரடைப்பு நோய் வருகிறது என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில் இந்த தகவலை ஐசிஎம்ஆர் மறுத்துள்ளது.