இளையராஜா நோட்டீஸுக்கு மஞ்சும்மள் பாய்ஸ் தயாரிப்பாளர் பதில்!

Filed under: சினிமா |

“மஞ்சும்மள் பாய்ஸ்” திரைப்படம் கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியானது. மலையாள திரைப்படமான திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருந்தனர்.

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இத்திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற சாதனையை “மஞ்சும்மள் பாய்ஸ்” படைத்துள்ளது. படத்தின் வெற்றிக்கு படத்தில் ஒரு முக்கியமான இடத்தில் இளையராஜாவின் “கண்மணி அன்போடு காதலன் எழுதும் கடிதம்“ பாடலை பயன்படுத்தியது காரணமாக அமைந்தது. சில நாட்களுக்கு முன் படக்குழுவினருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சர்ச்சையைக் கிளப்பியது. தன்னுடைய பாடலை அனுமதியின்றி படக்குழு பயன்படுத்தியுள்ளதாகவும், அதை உடனடியாக நீக்கவேண்டும் மற்றும் பாடலை பயன்படுத்தியதற்கான இழப்பீடை வழங்கவேண்டும் என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இப்போது மஞ்சும்மள் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர் பதிலளித்துள்ளார். அதில் “கண்மணி பாடலை முறையான அனுமதி பெற்றுதான் பயன்படுத்தினோம். இளையராஜாவின் நோட்டீஸ் எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை” என கூறியுள்ளார்.