இளையராஜா மகள் பவதாரிணிக்கு உதயநிதி இரங்கல்!

Filed under: சினிமா,தமிழகம் |

நேற்று மாலை இசைஞானி இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி காலமானார். அவரது மறைவிற்கு அமைச்சர் உதயநிதி மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் தங்களது சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் உதயநிதி தனது இரங்கல் செய்தியில், “இசைஞானி இளையராஜா அவர்களின் அன்பு மகள் பின்னணி பாடகி சகோதரி பவதாரணி, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது மரணம், தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும். அவருடைய மரணத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல். பவதாரணியை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா சார், சகோதரர்கள் கார்த்திக்ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அவருடைய குடும்பத்தார் -நண்பர்களுக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.