இஸ்ரோ தலைவர் சோமநாத் போட்டியா?

Filed under: அரசியல்,இந்தியா |

இஸ்ரோ தலைவர் சோமநாத்தை வரும் பாராளுமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெ உள்ளது. பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. கேரள மாநிலத்தில் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் வலிமையாக இருக்கிறது. பாரதிய ஜனதா இந்த மாநிலத்தில் மிகவும் குறைவான வாக்கு சதவீதத்தை கொண்டுள்ளது. இதனால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் மோதுவதற்கு வலிமையான வேட்பாளர்களை பாஜக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வகையில் திருவனந்தபுரம் தொகுதியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பாஜக வேட்பாளராக போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சசிதரூக்கு இவர் தான் சரியான போட்டியாளர் என்று பாஜக கருதுவதாக தெரிகிறது. நான்காவது முறையாக சசிதரூர் இதய தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் சோம்நாத் அவருடன் மோதுவாரா?