காங்கிரஸ் பிரமுகர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பார்வை இல்லாத ஒருவன் கண்ணாயிரம் என்று பெயர் வைத்துக் கொள்வது போல் ஊரை சுற்றிக் கொண்டிருக்கும் பரதேசி சீமான் என்ற பெயர் வைத்துக் கொள்வான் என்று தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி போட்டியில் இருக்கிறது. சீமான் கட்சி மட்டும் தனித்து போட்டியிடுகிறது. இதை ஒரு நான்காவது கூட்டணியாக அரசியல் விமர்சகர்கள் கண்டுகொள்ளவே இல்லை. ஏனெனில் கடந்த 15 ஆண்டுகளாக கட்சி நடத்தி வரும் சீமான் கட்சிக்கு ஒரு கவுன்சிலர் கூட இல்லை என்பதும் அது மட்டும் இன்றி எந்த தேர்தலிலும் அந்த கட்சியின் வேட்பாளர்கள் டெபாசிட் கூட பெற முடியாமல் இருப்பது தான் அக்கட்சியை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் என்றும் கூறப்பட்டுகிறது. காங்கிரஸ் பிரமுகர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தல் பிரச்சாரத்தின் போது “கண் பார்வை இல்லாதவன் கண்ணாயிரம் என்று பெயர் வைத்துக் கொள்வது போல் பரதேசியாக ஊரைச் சுற்றி கொண்டிருப்பவர்கள் தான் சீமான் என்ற பெயர் வைப்பார்கள்” என்று நாம் தமிழர் கட்சியின் சீமானை அட்டாக் செய்த போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர்களை கொன்ற கட்சி என்று காங்கிரஸ் கட்சியை சீமான் பல ஆண்டுகளாக விமர்சனம் செய்து வருகிறார். அதற்கு பதிலடியாக ஈவிகேஎஸ் இளங்கோவன் சீமானை தனிப்பட்ட முறையில் அட்டாக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.