ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது என்று தெரிகிறது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு விட்டார் தற்போது அவருக்கு நுரையீரல் பாதிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வீடியோ ஒன்றில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.