சென்னை உயர்நீதிமன்றம் ஈஷா மையத்திற்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டுள்ளது.
கோவை அருகே உள்ள ஈஷா மையம் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் கட்டிடங்கள் கட்டியதாக ஈஷா அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈஷா யோகா மையத்தை கல்வி நிறுவனமாக்க முடியும் என்றும் எனவே கட்டடங்கள் கட்ட விலக்கு பெற உரிமை உள்ளது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.