முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மகனான உதயநிதியை அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
“குருவி” திரைப்படத்தை முதன் முதலில் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி. பின்னர், சூர்யாவின் “ஆதவன்,” “மன்மதன் அம்பு” உட்பட பல படங்களை தயாரித்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, ஒரு சில படங்கள் மட்டுமே உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் வெளியிட்டது. அதிமுகவின் 10 ஆண்டுகாலத்திற்குப் பின், கடந்த ஆண்டு திமுக ஆட்சிப்பொறுப்பு ஏற்பட்டது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவாக பொறுப்பேற்ற உதயநிதி தற்போது படங்களில் நடித்தும் தயாரித்தும் வருகிறார். சமீபத்தில் வெளியான “விக்ரம்” உட்பட பல படங்களை தமிழகம் முழுவதும் விநியோகித்து வருவது உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ். பெரும்பாலான படங்களை விநியோகித்து வருவது பற்றி எதிர்க்கட்சிகளும், மக்களும் விமர்சித்தி வருவதாகவும், அனைத்துப் படங்களையும் ரெய் ஜெயண்ட் மூவிஸ் விநியோகிக்க முற்படுவதாக உளவுத்துறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கூறியுள்ளனர். எனவே, பிரபல நடிகர்களின் பெரிய படங்களின் தயாரிப்பு மற்றும் முக்கிய படங்களை மட்டும் விநியோகிக்கும்படி உதயநிதிக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.