துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்த போது அவர் தங்கியிருந்த பங்களாவுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குடியேற போவதாக தகவல் வெளியாகி உள்ளன.
உதயநிதி ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன் திமுக எம்எல்ஏவாக இருந்தவர் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதியை சந்திக்க துறை சார்ந்த அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் தினமும் வருவதால் அமைச்சர்களுக்கான அரசு பங்களாவில் குடியேற உதயநிதி முடிவு செய்துள்ளார். துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது தங்கி இருந்த குறிஞ்சி பங்களாவில் குடியேற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து அவர் விரைவில் துணை முதல்வராகவும் பதவி ஏற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.