உலகநாயகனின் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா!

Filed under: சினிமா |

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து தயாரித்துள்ள படம் “விக்ரம்.” இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. வரும் ஜூன் 2ம் தேதி திரைக்கு வரஉள்ளது.

இத்திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து, நரேன், பகத்பாசில், விஜய் சேதுபதி ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் சூர்யா ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கில் வெளியாகி பெரும் வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றுள்ள நிலையில், ஆடியோ வெளியீட்டு விழா பெரும் விமரிசையாக நடத்தப்பட்டது. இப்படத்தின் தெலுங்கு டிரெயிலரை ராம் சரண் இன்று சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.