சிறுத்தை சிவா சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும் “கங்குவா” திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இக்கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
படம் 10 மொழிகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்படுகிறது. ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. படத்தின் ரிலீஸ் அக்டோபர் 10ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது படத்தின் பிசினஸை தொடங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம். படத்துக்கு மிகப்பெரியளவில் செலவு செய்யப்பட்டுள்ளது. அதை திருப்பி எடுக்க அனைத்து வழிகளையும் தயாரிப்பு நிறுவனம் பயன்படுத்தவுள்ளது. அதன் ஒரு கட்டமாக படத்தின் புரமோஷனுக்காக சூர்யா, பல நாடுகளுக்கு அழைத்துச் சென்று அவரை நேர்காணல்கள் கொடுக்க வைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.