பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எடப்பாடி பழனிசாமியை கூட்டணி கட்சி தலைவராக ஏற்று கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்திய ராமதாஸ், “பணி சிறக்க எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து “பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், அருமை அண்ணன் மருத்துவர், ராமதாஸ் அவர்களின் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



