எடப்பாடி பழனிசாமியின் கேள்வி?

Filed under: அரசியல்,தமிழகம் |

எடப்பாடி பழனிசாமி உதயநிதி அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடப்போகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி பதவியேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு முடிசூட்டு விழா நடைபெற இருக்கிறது. மிகப் பெரிய தியாகத்தைச் செய்தே நாட்டுக்கு உழைத்த மாமனிதன் உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை முடிசூட்டு விழா நடைபெற இருக்கிறது. கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அவருடைய மகன் அடுத்ததாக முதலமைச்சரானார். தற்போது அவருக்கு அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி முதலமைச்சராகக் கொண்டு வருவதற்கான முடிசூட்டுவிழா தான் இந்த அமைச்சர் பதவி. உதயநிதி அமைச்சரானால் தமிழ் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதா? ஏற்கனவே எல்லாத் துறைகளிலும் ஊழல் நடைபெற்று கொண்டிருக்கிறது. அவர் வந்தால் அந்த ஊழல் எல்லாம் தலைவராக செயல்படுவார்” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.