அதிமுக கட்சியின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது டுவிட்டர் பக்கத்தில் சில மாற்றங்களை செய்துள்ளார். இது அவரது கட்சியினரிடத்தில் மட்டுமல்லாமல் மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க இருவருக்குமிடையே போட்டிகள் இருந்தது. இதில் எடப்பாடி பழனிச்சாமி மிக தீவிரமாக இருந்தார். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் முடிவுக்கு வந்துவிட்டதாக சி.வி.சண்முகம் அறிவித்திருந்தார். தற்போது டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளை நீக்கியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.