எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக கட்சி ஒற்றை தலைமை ஏற்பது குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் கட்சி இரண்டாக உடையும் நிலைமை எழுந்துள்ளதாக எம்.எல்.ஏ ஆறுக்குட்டி கூறியுள்ளார்.
சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து வருகின்றனர். சமீபத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விரைவில் அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் செயல்படும் என பேசியிருந்தார். மேலும் பல அதிமுக பிரபலங்களும் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என பிரிந்து ஆலோசனை நடத்தி வருவது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டி “என்னைக் கேட்டால் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவருமே அதிமுக பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டு, வேறு யாராவது தலைமை தாங்கட்டும். இரண்டு பேரும் சண்டையிட்டுக் கொள்வதால் கட்சி உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது” என கூறியுள்ளார். இது கட்சியினரிடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.