குருவி என்ற லோகோ டுவிட்டர் ஆரம்பித்த காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென நாய் லோகோவை அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் மாற்றினார். அவருடைய இந்த முடிவுக்கு டுவிட்டர் பயனாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வந்தது. தற்போது மீண்டும் குருவி லோகோ பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டுவிட்டர் நிறுவனத்தை கடந்தாண்டு பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். அதன் பிறகு அவர் அதில் பல அதிரடி நடவடிக்கைகளை கொண்டு வந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் டாக்காயின் என்ற கிரிப்டோ கரன்சி லோகோவான நாய் லோகோவை எலான் மஸ்க் டுவிட்டருக்கு வைத்தார். இந்த புதிய லோகோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது மீண்டும் குருவி டுவிட்டர் லோகோவாக எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.