ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்கள் குறித்து பாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு குறித்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று அறிவித்துள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவிலேயே அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட பல கிளைகளை கொண்ட வங்கியாகும். இதில் தற்போது வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனைக்கான ஜூனியர் அசோசியேட்ஸ் பணிகளுக்காக 8,424 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இட ஒதுக்கீட்டின்படி எஸ்.சி பிரிவினருக்கு 1,284 பணியிடங்கள், எஸ்.டி பிரிவினருக்கு 748 பணியிடங்கள், ஓபிசி பிரிவினருக்கு 1919 பணியிடங்கள், ஈ.டபிள்யூ.எஸ் பிரிவினருக்கு 817 பணியிடங்கள், பொதுப்பிரிவில் 3,515 பணியிடங்கள் என மொத்தம் 8,424 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.04.2023 தேதி கணக்கின்படி 20 வயதுக்கு குறைந்தவராகவோ 28 வயதுக்கு அதிகமானவராகவோ இருக்க கூடாது. அதாவது 02.04.1995 முதல் 01.04.2023க்குள் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். இதில் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படுகிறது.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்களில் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டியது அவசியம். விண்ணப்பிக்கும் நபர்கள் முதலில் Preliminary Exam வைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டு அடுத்து மெயின் தேர்வுகள் நடைபெறும். அதன்பின் எஸ்பிஐ வங்கியில் அப்ரெண்டிஸ் பயிற்சி அளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ ஜூனியர் அசோசியேட்ஸ் பணிக்கு விண்ணப்பிப்பது குறித்து மேலும் அறிந்து கொள்ள இந்த லிங்கை சொடுக்கவும். https://bank.sbi/documents/77530/36548767/161123-JA+2023-Detailed+Advt.pdf/926d28be-7df8-36f3-7113-344404668498?t=1700129762521