ஐந்து மொழிகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் “மாநாடு”.
சிம்பு, எஸ்.ஜே.சூர்யா இருவரின் கூட்டணி உருவான இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கினார். சுரேஷ் காமாட்சி தயாரித்தார்.
இத்திரைப்படம் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவானது. வெளியான முதல் நாளிலே ரூ.9 கோடி வசூலித்தது. முதல் வாரத்தில் ரூ.50 கோடி வசூலித்தது. 25வது நாளில் ரூ.100 கோடிகளைக் கடந்தது. இவ்வாண்டின் துவக்கத்தில் 100வது நாளைக்கொண்டாடிய இப்படம் ஓடிடியில் ரிலீஸானது. இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று இப்படம் உலகம் முழுக்க சுமார் ரூ.117 கோடி வசூல் குவித்துள்ளதாக என அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.