ஏவிஎம் நிறுவனம் தமிழ் சினிமாவின் முன்னணி சினிமா தயாரிப்பு நிறுவனம். ஆனால் சமீப காலமாக படங்களைத் தயாரிப்பதில் இருந்து விலகிக் கொண்டு மற்ற பணிகளில் மட்டுமே ஈடுபாடு காட்டியது. ஆனால் இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்க உள்ளது. சமீபத்தில் அருண் விஜய் நடிக்க, ஈரம் அறிவழகன் இயக்கிய “தமிழ் ராக்கர்ஸ்” என்ற வெப் சீரிஸ் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றது.
ஏவிஎம் நிறுவனம் இப்போது மீண்டும் படத் தயாரிப்பில் இறங்க உள்ளது. ஆனால் அவர்கள் படம் தயாரிக்கப் போவது தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாக உருவாக உள்ளது. இந்த படத்துக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் பைனான்ஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க, பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களமாக உருவாக உள்ளதாம். படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க விஜய்சேதுபதியை அனுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் அஜய் ஞானமுத்து.