ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் விஜய் படம்!

Filed under: சினிமா |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் “லியோ” திரைப்படம் இவ்வாண்டில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

“லியோ” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இப்படம் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுதும் ரிலீசாகவுள்ளது. படத்தில் விஜய்யுடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்போது திடீரென “லியோ” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உளள்து. விஜய் & -லோகேஷ் காம்பினேசனில் “மாஸ்டர்” படத்திற்குப் பின் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. நடிகர் விஜய்யின் “லியோ” திரைப்படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்பம் வாயிலாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.