ஒடிசா ரயில் விபத்தில் 1,200 பேருக்கு பாதிப்பில்லை

Filed under: இந்தியா |

ஒரு ரயிலில் பயணித்த 1200 நபர்களில் ஒருவருக்குக் கூட எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகிய இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததால் நேற்று ரயில் விபத்து ஏற்பட்டது. இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்தது எப்படி என்பது தொடர்பான விசாரணையை ரயில்வே தொடங்கியுள்ளது. தடம் புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டி மீது பெங்களூரு-ஹவுரா அதிவிரைவு ரயில் மோதிய நிலையில் பெங்களூரு-ஹவுரா அதிவிரைவு ரயிலில் இருந்த 1,200 பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த சுமார் 300 பேர் பலியாகியுள்ளனர்.