நடிகை ரித்திகா சிங் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளவர். சுதாகர் கொங்கர பிரசாத் இயக்கத்தில், ஆர்.மாதவனுடன் சேர்ந்து “இறுதிச்சுற்று” என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றார்.
தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரித்திகா சிங் நடித்திருந்தாலும், அவரால் பிரபலமாக முடியவில்லை. இப்போது துல்கர் சல்மான் நடிக்கும் “கிங் ஆப் கோதா” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் இப்பாடல் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.