ஒரே நாடு ஒரே தேர்தல் ஏற்க மாட்டோம்: மம்தா பானர்ஜி!

Filed under: அரசியல்,இந்தியா |

மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இது குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்யேக இணையதளம் மற்றும் ஈமெயில் முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஏற்க மாட்டோம். சட்டப்பேரவை பாதியில் கலைக்கப்பட்டால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பையே ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் நிலைகுலைய செய்யும். ஒரே நாடு ஒரே திட்டத்தின் குழுவின் செயலாளர் நிதின் சந்திராவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். உண்மையான ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி உணர்வுக்கு எதிரானது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்” என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.