பி.டி.உஷா முதல் முதலாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டிசம்பர் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
கடந்த 26ம் தேதி இந்த தேர்தலில் இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படும் பி.டி.உஷா தனது விருப்பத்தை வெளியிட்டார். இதையடுத்து இத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பி.டி.உஷாவை தவிர வேறு யாருமே இத்தேர்தலில் போட்டியிட வில்லை. அதனால் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக தங்க மங்கை பி.டி.உஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராகவும் பி.டி.உஷா மாறுகிறார் என்ற பெருமையும் அவருக்குக் கிடைக்கப் போகிறது.